நீயில்லாத் தனிமை




உன் நினைவுகளும்,
கிளம்புகையில் நீ கலைத்துச் சென்ற
என் கேசமும்
அப்படியே இருக்கின்றன.

கொல்லை புறத் தோட்டத்திலுள்ள
உன் கால்த் தடங்களில் நீர் நிரப்பி
என் தனிமையை ஒரு செடியாய் வளர்க்கிறது,
சற்று முன் பெய்யத் துவங்கிய மழை.

நிகழ்கால நிமிடங்களை
நாம் கூடிக் களித்த கணங்களின்
போலியான நீட்சியாய் மாற்ற
பகல் கனவின் வழியே முயற்சித்துத் தோல்வியுறுகிறேன்.

என்னால் ஒன்றும் செய்ய முடிவதில்லை
நீ இல்லாத இந்தத் தனிமையை...
வேடிக்கை பார்ப்பதைத் தவிர!

2 comments:

ச.பிரேம்குமார் புதன், ஜூலை 02, 2008 1:03:00 PM  

/கொல்லை புறத் தோட்டத்திலுள்ள
உன் கால்த் தடங்களில் நீர் நிரப்பி
என் தனிமையை ஒரு செடியாய் வளர்க்கிறது,
சற்று முன் பெய்யத் துவங்கிய மழை.
//

மழையாய் நனைத்து உள்ளூர கிடந்த பழைய காதல் நினைவுகளையெல்லாம் மீண்டும் பூக்கச்செய்தது உங்கள் கவிதை. வாழ்த்துக்கள் சிவா!
ரொம்ப நாள் கழித்து உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். இப்போதெல்லாம் எழுதுவதில்லையா?

ஸ்ரீவி சிவா வியாழன், ஜூலை 03, 2008 7:14:00 PM  

வாங்க பிரேம்...நன்றி!!உங்கள் பின்னூட்டம் மிக்க ஊக்கமளிக்கிறது.

வேலை பளுவால் எழுதுவதை *ரசனையோடு* தொடர முடியவில்லை... :(
கூடிய விரைவில் தொடர்வேன்...

மொழியோடு உங்கள் பயணத்தை பார்த்து,படித்து,ரசித்து ஒரு பின்னூட்டம் இட்டுள்ளேன்.

கருத்துரையிடுக

இதுவரை பார்த்தவர்கள்

தேடு

Facebook-ல மொக்கை போட