சொந்த ஊர்ப் பயணமும், சில குட்டிக் கவிதைகளும் - 5




துயில் கலைந்த ஓர் இரயில் பயண பின்னிரவில்,

கதவருகில் நின்று மழைச் சாரல்
ரசித்து மனம் நனையலாம்.
கேள்விகள் கேட்டுத் தூங்கிப் போன
எதிர் இருக்கை சிறுமிக்காக
பதில்கள் தேடலாம்.
அடுத்த நிறுத்தத்தில் ஒரு கோப்பை
தேநீர்கிடைக்கத் தவமிருக்கலாம்.
உன் முதல் முத்தங்களை சாத்தியப்படுத்திய
என் ஏழாவது கவிதையை விட சிறந்த
ஒன்றிற்காகவும் முயற்சிக்கலாம்.

இந்த அகாலத்திலும் எங்கிருந்தோ
உன் முத்தங்களின் மகரந்தம்,
என் சுற்று வளியை ஆட்கொள்கிறது.
நான் கவிதைக்கான வார்த்தைகள்
கோர்க்கத் துவங்குகிறேன்.




5 comments:

SKP ஞாயிறு, டிசம்பர் 14, 2008 7:39:00 PM  

Mapillai..
Nalla irukku. Etho oru nalla feel kidaikuthu.. aana nee innum konjam feel pannalam :-)

"Vali" - prayogam correctannu theriyala... paru.

ஸ்ரீவி சிவா ஞாயிறு, டிசம்பர் 14, 2008 8:24:00 PM  

சுந்தர்,

ம்ம்... நான் இன்னும் பார்வையை விசாலமாக்கணும்.

'சுற்று வளி' - இந்த வார்த்தை இது வரை நானும் எங்கேயும் பார்த்ததில்லை. இப்போ வரைக்கும் சரின்னு தான் நினைக்கிறேன்.

சும்மா.. ஒரு முயற்சி. பார்த்துட்டு தப்புனா மாத்தனும் தல.

விமர்சனத்திற்கு நன்றிகள் பல...

Bala செவ்வாய், டிசம்பர் 16, 2008 12:37:00 PM  

bossu.. Romba naala iruku..
"உன் முதல் முத்தங்களை சாத்தியப்படுத்திய என் ஏழாவது
கவிதையை விட சிறந்த ஒன்றிற்காகவும் முயற்சிக்கலாம்"..

பெயரில்லா செவ்வாய், டிசம்பர் 16, 2008 6:44:00 PM  

hmm......ennamo miss aaguthe????
ulla irunthu varanum bossu........[vera enna solrathunnu theriyalai]........etho oru seyarkai thanam ottikittu irukkara feeling avlo thaan..

ஸ்ரீவி சிவா புதன், டிசம்பர் 17, 2008 9:54:00 PM  

பாலா ... நன்றிகள்.
வாங்க aangtce பாஸு... வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி. உங்கள் கருத்து கவனத்தில் கொள்ளப்படுகிறது.
அது சரி.. உங்க ப்ளாக்கை பாத்தேன்... நீங்க நம்ம ஊர்(ஸ்ரீவி) பக்கம் மாதிரி தெரியுது... நெசமாவா? :)

கருத்துரையிடுக

இதுவரை பார்த்தவர்கள்

தேடு

Facebook-ல மொக்கை போட