சொந்த ஊர்ப் பயணமும், சில குட்டிக் கவிதைகளும்

தீபாவளிக்கு ஊருக்கு செல்லததால் சேர்ந்த பாவத்தை தொலைக்க, இரண்டு வாரஙளுக்கு முன்பு ஒரு சுப யோக தினத்தில் ஊருக்கு கிளம்பினேன்... நம்ம டேமேஜர்(அதாங்க மேனேஜர்) கிட்ட பொய் சொல்லி வாங்கின 2 நாள் லீவ் மற்றும் சனி,ஞாயிறு சேர்த்து இந்த நாலு நாள் ட்ரிப் நல்ல ஒய்வாகவும் அழகாகவும் இருந்தது...

நிம்மதியா, முதல் ரெண்டு நாள் உணவு, ஓய்வு, மாலையில் நகர்வலம்(ஒரு புல்லையும் புடுங்காம நல்லா சாப்பிட்டு ஊர் சுத்துனதைத் தான் இப்படி டீசண்டா சொல்றோம் ) என கழிந்தது. "என்ன ஒரு வாழ்க்கை.. அற்புதம்யா"-ணு இன்னும் மனசு சொல்லிகிட்டே இருக்கு... ;)

அடுத்து நண்பனின் தங்கை திருமணம்... இதில ஒரு நாள் கழிந்தது.

வெயில் இல்லாமல், சில நேரங்களில் சாரலோடு பட்டய கிளப்பின வானிலை...
(இதே நேரத்தில் சென்னையை மழை புரட்டி எடுத்து கொன்டிருந்தது.. எஸ்கப்டா சாமீ)
ஒரு மாற்றமுமில்லாமலிருக்கும் ரத வீதிகள்...
மொட்டை மாடி காற்று...
திருமணத்தில் பாந்தமாய் சேலை உடுத்தி,அடிக்கடி அழகாய் சிரித்து கொண்டிருந்த ஒரு (பெயர் தெரியாத)பெண்.

எல்லாம் ஒரு கலவையா கலந்து கட்டி, நமக்குள்ள தூங்கிட்டிருந்த கவிஞனைத்(!) தட்டி எழுப்பிருச்சு... அப்புறம் எழுத ஆரம்பிச்சு, கடந்த ரெண்டு வாரமா, கவிதைங்ற பேர்ல எழுதி கிழிச்ச எல்லாத்தையும் இங்க ஏத்துறேன். பார்த்துட்டு சொல்லுங்க/திட்டுங்க/அடிங்க/ தப்பி தவறி ஏஎதாவது நல்லா இருந்தா வாழ்த்துங்கள். :)

4 comments:

Yara Iruntha Enna, but We never walk alone. செவ்வாய், டிசம்பர் 16, 2008 12:52:00 பிற்பகல்  

bossu, ennum neriya eluthi irukalamnu thonudhu.. unnoda nadaila nalla comedy sense iruku bossu.. readers kadippa sirippanga.. keep this kind of mokkai!!!

ஸ்ரீவி சிவா செவ்வாய், டிசம்பர் 30, 2008 4:33:00 பிற்பகல்  

mikka nanri bala

jmsithik திங்கள், மார்ச் 23, 2009 4:43:00 பிற்பகல்  

நம்ம டேமேஜர்(அதாங்க மேனேஜர்).. gud!!

//திருமணத்தில் பாந்தமாய் சேலை உடுத்தி,அடிக்கடி அழகாய் சிரித்து கொண்டிருந்த ஒரு (பெயர் தெரியாத)பெண்.// ungala partha?

Simply Superb!!

ஸ்ரீவி சிவா செவ்வாய், மார்ச் 24, 2009 2:42:00 பிற்பகல்  

நன்றி சித்திக்!!!

//ungala partha?//
இது நடந்திருந்தா நல்லாத்தான் இருந்திருக்கும்!!! ம்ம்ம்ம்ம்....... ;)

கருத்துரையிடுக

இதுவரை பார்த்தவர்கள்

தேடு

Facebook-ல மொக்கை போட