எண்ணங்கள்...மீண்டும்!

மூடப்பட்ட கதவுகளின் உள்ளிருக்கும்
இரகசியத்தைப் போல,
உன் மெளனத்திற்கான காரணத்தை
என்னால் அனுமானிக்க முடியவில்லை.


எந்த மொழியிலிருந்தேனும் வார்த்தைகள்
கோர்த்து காரணத்தை சொல்லி விடு...
உன் மெளனம் தாங்காமல் நான்
தாய்மொழி மறந்து பேதலிக்கும் முன்!


==============================================ஒரே குடைக்குள் நின்ற நெருக்கத்தால்
உன் சுவாசத்தின் வெப்பம் பட்டு,
அந்தப் பெருமழையிலும்
என் இதயம் ஈரமற்று உலர்ந்து விட்டது!

உன்னால் முடியுமளவிற்கு முத்தங்களிட்டு
ஈரப்படுத்தி விட்டுப் போ - என
ஓசையில்லா ஒரு மொழியில்
நான் சொல்வது உனக்குக் கேட்கிறதா?

2 comments:

ur well wisher வியாழன், பிப்ரவரி 22, 2007 4:01:00 பிற்பகல்  

Ur Kavithaigal Simply superb....

Yara Iruntha Enna, but We never walk alone. செவ்வாய், டிசம்பர் 16, 2008 12:47:00 பிற்பகல்  

bossu, at a time la, romantica vum, feelings aa vum eppi di bossu mudiyudhu..

கருத்துரையிடுக

இதுவரை பார்த்தவர்கள்

தேடு

Facebook-ல மொக்கை போட