சொந்த ஊர்ப் பயணமும், சில குட்டிக் கவிதைகளும் - 4


சாலை கடக்கையில் இறுகக்
கரம் பற்றிக் கொள்வாய்
சில நிமிடப் பேருந்து பயணத்திலும்
தோள் சாயத் தவறுவதில்லை
ஒன்றாய்த் தேநீர் அருந்திய
பின்பனிக் கால மாலை வேளைகள்

இவையனைத்தும் சேர்ந்து அல்ல -
வலியுணர்த்த ஒவ்வொன்றுமே அதனளவில்
முழுமையான காரணங்கள்.
என் வீட்டுத் தொட்டிச் செடி
இலைகள் உதிர்க்கத் துவங்கியாயிற்று...
நாளையேனும் வா!!!2 comments:

Yara Iruntha Enna, but We never walk alone. செவ்வாய், டிசம்பர் 16, 2008 12:42:00 பிற்பகல்  

unnoda experienceaa nalla use panni irukae pola..
"சாலை கடக்கையில் இறுகக் கரம் பற்றிக் கொள்வாய்,
சில நிமிடப் பேருந்து பயணத்திலும் தோள் சாயத் தவறுவதில்லை,
ஒன்றாய்த் தேநீர் அருந்திய பின் பனிக் கால மாலை வேளைகள்"

Intha varigal ellam anupavithu eludiyatha?

ஸ்ரீவி சிவா புதன், டிசம்பர் 17, 2008 9:59:00 பிற்பகல்  

கதாபாத்திரங்கள் முழுக்க முழுக்க கற்பனை..
யாரையும் குறிப்பிடுவன அல்ல..... :)
இது நிஜமா நடந்தால் உனக்கு தான் முதல்ல சொல்லுவேன்... கவலைபடாதீங்க பாஸ்

கருத்துரையிடுக

இதுவரை பார்த்தவர்கள்

தேடு

Facebook-ல மொக்கை போட