மழை சூழ் காலை வேளைகள்

தமிழ் திரையிசை பாடல்கள் தவிர Bryan Adams, Bon Jovi, Enrique என தலைக்கு நாலு பாட்டு தெரிஞ்சு வெச்சுகிட்டு 'நாங்களும் இங்கிலீஷ் மீஜிக் கேப்போம்ல அப்படின்னு அலப்பறைய குடுத்துட்டு இருந்தேன். புதுசா வேலைக்கு சேர்ந்து நம்ம கோஷ்டில ஐக்கியமான நிஜமாவே இங்கிலீஷ் மீஜிக் கேக்குற ஒரு சகா, The Corrs எனும் இந்த ட்ரூப்பின் Toss the feathers யூடியூப் லிங்க் அனுப்பினான். நீங்களும் கேட்டு பாருங்க... அழகிய பெண்கள்...அற்புத இசை.இந்த மாதிரி ஒரு இசை நிகழ்வில் அன்பின் தோழி யாராவது உடனிருக்க, மிதமான மது போதையில் நடனமாடிக் கொண்டே இசையுடன் ஒன்ற வேண்டுமென்பதுதான் என் நெடு நாளைய கனவு. ம்ம்ம்...!!!!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$கவிஞர் அம்சப்ரியா நடத்தும் 'புன்னகை' இலக்கிய சிற்றிதழின் அறுபதாவது பதிப்பு, இணையத்தில் இயங்கும் அறுபது கவிஞர்களின் கவிதைகள் தொகுப்பாய் வெளிவந்தது. அதில் என்னுடைய கவிதையும் ஒன்று மாநகரைத் துயிலெழுப்புபவள் . புத்தகத்தை வாங்கி அச்சில் நம் எழுத்தை பார்க்கும்போது சிறப்பானதொரு உணர்வு. மிக சிறந்த கவிதை படைப்புகளினூடே நம்முடையதும் இருக்கிறதென்பது என்னளவில் மிகப் பெரிய அங்கீகாரம்.

அதோடு தோழர் மாதவராஜ், புதிதாய் வலையில் எழுதுபவர்களை அறிமுகம் செய்யும் 'புதிய பதிவர்கள் அறிமுகம்' எனும் பகுதியில் என்னுடைய இந்த வலைப்பூவையும் அறிமுகம் செய்துள்ளார்.
சக கவிஞர்கள்/பதிவர்களுக்கு வாழ்த்துகள். தோழர் மாதவராஜ், கவிஞர் அம்சப்ரியா இருவருக்கும் நன்றிகள்.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


முதலில் ட்விட்டரை பற்றி கேள்விப்படும்போது 'அப்படி இதுல என்ன இருக்குன்னு பைத்தியமா திரியுறாய்ங்க'-ன்னு தோன்றியது. இப்போது அந்த பைத்தியங்களில் நானும் ஒருவன். எதையாவது பளிச்னு சொல்லி மேதாவித்தனத்தை காட்டிக்கொள்ளத் துடிக்கும் மனிதனின் உள்ளுணர்வை ட்விட்டர் எனும் சிட்டுக்குருவி அற்புதமாய் exploit செய்கிறது. இதுவரை நான் ட்விட்டிய சில சிந்தனைகள்(?)/தத்துவங்கள்(?)/மொக்கைகள்(!) கீழே. படித்து விட்டு கோபம் வந்தால் டிவிட்டரில் என்னை பின்தொடரவும். எல்லை மீறிய கோபம்/ விரக்தி ஏற்பட்டால் மேலே உள்ள வீடியோவை மீண்டுமொரு முறை பார்த்து ஆன்மாவை சுகப்படுத்துவீராக. ஆமென்!

## இந்த பக்தகோடிகள் தொல்லை தாங்க முடியலப்பா... மார்கழி மாசம் குழாய் ஸ்பீக்கரை கட்டி 'Hi-Decibel' ல பாட்டு போட்டாதான் அம்மனோ/அய்யப்பனோ வந்து அருள்புரிவாங்களா? காலைல 5 மணிக்கே ஆரம்பிச்சிர்ராய்ங்க.நல்லா தூங்கி 4 நாள் ஆச்சு..இவிய்ங்க பக்தியில மண்ணுலாரிய விட்டு தான் ஏத்தனும்!

## Watched 'Scent of a Woman'.Al Pacino rocks.1 of his dialogs is.."Women! Wat can u say?Who made 'em?God must hv been a fuckin' genius!"

## "ரஹ்மான் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு!" A.R.R strikes again with double Grammy awards. நீ கலக்கு தலைவா!!!

## IPL - CSK Vs MI : ஏதோ உள்குத்து இருக்கோ? ஊதா சட்டைக்காரய்ங்க வேணுமினே மஞ்ச சட்டைக்காரய்ங்களுக்கு விட்டுகுடுத்த மாதிரி இருந்தது.

## India in T20 worldcup: "W.Indies... Send India back to home in their undies" என கமெண்ட் எழுதிய அட்டையை உயர்த்தி பிடித்திருந்தார் ஒரு மே.இ தீவு அணியின் ரசிகர்.
அவர் எதிர்பார்த்தது போன்றே மே.இ தீவு இந்தியாவின் டவுசரை கழட்டியது.
நேற்று மிச்சமிருந்த ஒட்டு துணியையும் உருவி விட்டது இலங்கை அணி. இவிய்ங்க (IND) விளையாடுற அழகைப் பார்த்து BP ஏறினதுதான் மிச்சம். :-(

## சகா ஒருவனிடம் என் அறிவுரை: "சமுதாயம் ஒரு சரக்கடிச்ச குரங்கு மாதிரி... அதைப் பத்தி கவலைபடாத". சொல்லி முடித்ததும் அடிக்க துரத்துகிறான். :-(

## இன்றொரு இண்டர்வியு.எடுத்தது அழகிய பெண்.அவளின் அதிநுட்பமான கேள்விகளுக்கெல்லாம் சரியாய் பதிலளித்தும் புன்னகைக்கவேயில்லை. VC++ =சாத்தான் மொழி
இனி வரும் சுற்றுகளை சமாளித்து தேறி எப்படியாவது அங்கு வேலையில் சேர வேண்டும், சிரிக்கும் போது அவள் எப்படி இருக்கிறாள் என பார்ப்பதற்கு. ;-)

## வெகுநாட்களுக்கு பின் சமைத்து,வீட்டின் கூரையேறி நிலாச்சோறு உண்டோம். அறைத்தோழன் ராஜாவின் புது மின் குக்கர் புண்ணியத்தில்.என்ன தவம் செய்தனை.

## கொடியிடை பெண்ணுக்கு கொங்கைகள் வளமாய் இருப்பது + அவள் உங்களை பார்த்து சிரிப்பது = மேஜிகல் ரியலிசம்.

சில நாட்களாய் மேக மூட்டத்துடன் விடியும் சென்னை நகரத்துக் காலையொன்றில் ட்விட்டிய 'பீலிங்கு' கவிதை


ஒன்றாய் தேநீர் அருந்த

கழுத்தோர வாசம் நுகர்ந்து முத்தமிட

காதல் மொழி பேசி உருக

யாரையாவது காதலித்துத்

தொலைந்திருக்கலாமெனத் தோன்றுகிறது,

ரம்மியமான மழை சூழ் காலை வேளைகளில்.

இதுவரை பார்த்தவர்கள்

தேடு

Facebook-ல மொக்கை போட