அங்காடித் தெரு - விளிம்பு நிலை மனிதர்களின் கதை

என்றாவது தி.நகர் அடுக்கு மாடி ஸ்டோர்களில் பொருட்கள் வாங்கும் வேட்கையின் நடுவே நெல்லைத் தமிழ் மணக்கப் பேசும் பணியாளர்களையும், அவர்களுக்கென இருக்கும் வாழ்வையும் பற்றி நினைத்ததுண்டா? நினைக்க கற்றுத் தருகிறது அங்காடித் தெரு. நூறு பேரை அடித்து வீழ்த்தி, பஞ்ச் டயலாக் பேசி, வெளிநாடுகளில் பாட்டுக்கு நடனம் ஆடும் தல/தளபதி நடிகர்களுக்கும் இவ்வளவு நாள்(வருடங்கள்) விசிலடித்து கை தட்டிய நம் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம். சில குறைகள் இருப்பினும் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களின் வரிசையில் இதுவும் உண்டு என தைரியமாய் சொல்லலாம்.





பெரும்பான்மையாய் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து, இத்தகைய அடுக்கு மாடி ஸ்டோர்களுக்கு பணி செய்ய அழைத்து வரப்படும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் சிடுக்குகள் நிரம்பிய வாழ்வை ரத்தமும் சதையுமாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். தந்தையை இழந்து கல்லூரி படிப்பு சாத்தியபடாமல் இங்கு பணி புரிய வரும் கதாநாயகனுக்கும், வீட்டின் பொருளாதார சுமை காரணமாக இங்கு பணி செய்யும் கதாநாயகிக்கும் இடையேயான யதார்த்த வாழ்வை, அவர்கள் தங்குமிடத்தில் துவங்கி, உணவு, பணி சுமை, அவர்கள் நடத்தப்படும் முறை என எல்லாவற்றையும் படம்பிடித்துக் காட்டுகிறது.

எடுத்துக் கொண்ட கதையும், அதற்கு வலு சேர்க்கும் ஜெயமோகனின் வசனங்களும் காத்திரமாய் இருக்கிறது. ஒன்றி படம் பார்க்கும் எவரையும் உலுக்கும் காட்சிகள் நான்கைந்து உண்டு. புதுமுக நாயகன் நன்றாய் நடித்திருக்கிறார். பருத்தி வீரன் ப்ரியாமணிக்குப் பிறகு ஒரு அடர்த்தியான கதாநாயகி வேடத்தை தன் அபார நடிப்பால் நிறைவாய் செய்திருக்கிறார் அஞ்சலி. சராசரியான ஒளிப்பதிவும், மோசமான பின்னணி இசையும் தரத்தை வெகுவாய் பாதித்தும், தனது கதையால்/உழைப்பால் சரி செய்திருக்கிறார் இயக்குனர். மசாலா பார்முலாக்களில் இருந்து விலகி ஒரு சாதாரண கதையம்சத்துடன் படம் எடுப்பதே சாத்தியமில்லாத தமிழ் சினிமா சூழலில், புதிய மாற்று திசை நோக்கிய தமிழ் சினிமாவின் பயணத்தை இன்னும் முன்னெடுத்து செல்கிறது அங்காடித் தெரு. இம்மண்ணின் மக்கள் நடமாடும் கனமான கதையை கொண்ட இப்படம் விமர்சனங்களால் ஆராயப்பட வேண்டிய படமல்ல.

தமிழ் சினிமா இதுவரை கட்டமைத்த அதிவீர கதாநாயக பிம்பங்களும், அர்த்தமற்ற க்ளிஷேக்களும் இப்படத்தின் வெற்றியில் உடைந்து நொறுங்கட்டும். வசந்தபாலனுக்கும் அவருடைய உதவி இயக்குனர்களுக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.

10 comments:

நேசமித்ரன் திங்கள், மார்ச் 29, 2010 2:38:00 முற்பகல்  

நல்ல விமர்சனம்

Unknown செவ்வாய், மார்ச் 30, 2010 12:10:00 பிற்பகல்  

Sorry shiva enaku tamila eppadi type panrathunnu theriyala... but kandippa angadi padam parthuttu unga vimarsanathuku padil solrane. keep it up.

Unknown செவ்வாய், மார்ச் 30, 2010 12:17:00 பிற்பகல்  

சிவா நலமாக இருக்கீங்களா? உங்கள் ப்ளாக் அற்புதமாக உள்ளது. உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

ஸ்ரீவி சிவா செவ்வாய், மார்ச் 30, 2010 7:53:00 பிற்பகல்  

@நேசமித்ரன்
நன்றி நேசன். :)

@Angel
கண்டிப்பா பாருங்க. அதுவும் தியேட்டர்ல. :)
மிக்க நலம். நன்றி.

தோழி புதன், மார்ச் 31, 2010 8:05:00 பிற்பகல்  

good review. more than review - good way of sharing your thoughts. keep it up shiva

ஸ்ரீவி சிவா வியாழன், ஏப்ரல் 01, 2010 2:41:00 பிற்பகல்  

@தோழி
நன்றி அனு...
//more than review - good way of sharing your thoughts. //
நீங்க சொன்னது சரிதான். கதையை முழுசா சொன்னா பாக்குறவங்களுக்கு
த்ரில் போயிடும்னு நினைச்சு அதை விவரிக்காம வேணுமினே சொல்லலை.

விக்னேஷ்வரி செவ்வாய், ஏப்ரல் 06, 2010 12:37:00 பிற்பகல்  

நல்ல விமர்சனம் சிவா. படம் பார்க்கிறேன்.

ஸ்ரீவி சிவா புதன், ஏப்ரல் 07, 2010 12:36:00 பிற்பகல்  

நன்றி விக்கி... கண்டிப்பா பாருங்க

பெயரில்லா சனி, ஏப்ரல் 10, 2010 2:55:00 பிற்பகல்  

hey shiv...nice review dear...keep up the good work...yes...i used to think of those ppl working in such type of stores..am sure they wl be meted out with worse treatment...life is not the same for everybody u c...thanks for sharing this in ur blog...cheerz...

பருப்பு (a) Phantom Mohan ஞாயிறு, ஏப்ரல் 18, 2010 1:18:00 முற்பகல்  

மாப்ள சில்லுத்தூரா நீ, நான் ராசபாளையம்...எந்த தெருடா செல்லம்...நானும் புதுசா கட தொரந்திருக்கேன் முடிஞ்ச வந்து பாருங்க

கருத்துரையிடுக

இதுவரை பார்த்தவர்கள்

தேடு

Facebook-ல மொக்கை போட