காமம் வழிந்தோடும் பனிக் காலம்


1.

நேற்றைய கனவில் உனைப் புணர்ந்து
களித்ததை கவிதையாயெழுத முடிவெடுத்தேன்.
மெல்லிய அணைப்பில் பகிர்ந்த
வெம்மையான முத்தங்களோடு துவங்குகிறது கவிதை.
உன் வனப்பு மிகு கொங்கைகளையும்,
ஆழ்ந்த முயக்கப் பொழுதுகளில் உன் முனகலையும்
பற்றி சில வரிகள் சேர்த்தாயிற்று.
கவிதை முழுமையுறும் வேளையில்,
எனதறையில் உன் வாசம் பரவ
கவிதைக்குப் பின்னாலிருந்து உன் விசும்பல் சத்தம்.
வார்த்தைகளைக் கலைத்து விட்டு
உனைத் தேடி கவிதைக்குள்ளிறங்கும் என்னைத்
தீராக் காமத்துடன் கட்டிக் கொள்கிறாய்.
முத்தங்களோடு தொடங்கும் மற்றுமொரு
கூடலின் வெப்பத்தில் எரிந்தழிகிறது
நிகழையும் கனவையும் பிரிக்கும் சுவர்.
காத்திருக்கிறது கவிதை.. அதன் முடிவிற்காக.


===========================


2.

நீ வராத நாட்களின் தவிப்புகளும்
உனைக் கண்டதும் பரவும் மகிழ்ச்சியும் சேர்ந்து
உன் மீதான ஈர்ப்பிற்கு
காதலெனப் பெயரிட்டுச் சிலிர்த்துக் கொண்டன.

பின்பொரு பனிக்கால மாலையில்
பெண்மை ததும்பும் நடையால் அசையும்
உன் பிருஷ்டத்தின் சிறு மென் அதிர்வுகளில்
காதல் எனும் பெயர் தடமழிந்து மறைய,
மெலிதாய்ப் புன்னகைக்கிறது
சாஸ்வதமாய் உள்ளுறைந்திருக்கும் காமம்.


===========================


3.

உடலதிர முயங்கிக் களைத்த
முதல் புணர்தலுக்கு பின்னர்,
தளும்பும் உன்னிரு முலைகளுக்கு நடுவே
வழிந்திறங்கும் வியர்வைத் துளியொன்றில்
கரைந்தோடுகிறது,
பதின்ம வயது முதல் சேர்த்து வைத்த
என் காமமும் வேட்கையும்.

21 comments:

நேசமித்ரன் ஞாயிறு, ஏப்ரல் 18, 2010 8:42:00 பிற்பகல்  

மிக அழுத்தமான மொழியில் பேசுகிறது கவிதை

பெயரில்லா ஞாயிறு, ஏப்ரல் 18, 2010 9:03:00 பிற்பகல்  

Excellent!!

ஷர்மி ஞாயிறு, ஏப்ரல் 18, 2010 9:26:00 பிற்பகல்  

உறை நிலைக்கும்
உருகு நிலைக்கும்
ஊசாலட வைகிறாய் .........

Matangi Mawley ஞாயிறு, ஏப்ரல் 18, 2010 10:17:00 பிற்பகல்  

beautiful!!

இரசிகை திங்கள், ஏப்ரல் 19, 2010 12:16:00 முற்பகல்  

m.........nallaa yezhuthiyirukkenga!

உத்தண்டராமன் திங்கள், ஏப்ரல் 19, 2010 9:25:00 முற்பகல்  

miga arputham siva ...

ஸ்ரீவி சிவா திங்கள், ஏப்ரல் 19, 2010 5:12:00 பிற்பகல்  

@நேசமித்ரன்
நன்றி நேசன்.
கவிஞரின் பாராட்டு.மகிழ்வாய் இருக்கிறது. :)

@பெயரில்லா.
நன்றி.

@ஷர்மி
இங்க பார்ரா.. கவிதைலயே கமெண்ட்.
நல்லாயிருக்கு.மிக்க நன்றி.

ஸ்ரீவி சிவா திங்கள், ஏப்ரல் 19, 2010 5:15:00 பிற்பகல்  

@Matangi Mawley.
நன்றி மாதங்கி. அடிக்கடி வாங்க.

@இரசிகை
நன்றிங்க. அடிக்கடி வாங்க.

@உத்தண்டராமன்
நன்றி நண்பா.

தோழி திங்கள், ஏப்ரல் 19, 2010 9:00:00 பிற்பகல்  

Shiva, நல்லா வந்திருக்கு. ஒரு மெல்லிய மென் சிரிப்போடு படிக்க முடிந்தது. வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள்

விக்னேஷ்வரி திங்கள், ஏப்ரல் 19, 2010 11:11:00 பிற்பகல்  

அட, ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க சிவா.
கடைசியில எதுக்குப் பின்குறிப்பு?

ஸ்ரீவி சிவா செவ்வாய், ஏப்ரல் 20, 2010 9:34:00 முற்பகல்  

@தோழி
நன்றி அனு. கண்டிப்பா.

@விக்னேஷ்வரி
மிக்க நன்றி விக்கி.
பின்குறிப்பு தேவையில்லைதான்.
இருந்தாலும் 'டமில்' தெரியாத பசங்களுக்காக.

Unknown புதன், ஏப்ரல் 21, 2010 10:09:00 முற்பகல்  

Marvelous ..!

tamil theriyathavangalukku intha pin kurippu padicha mattum michamulla kavithai puriyumaakum :)

Thamira புதன், ஏப்ரல் 21, 2010 6:37:00 பிற்பகல்  

இரண்டாவது, மூன்றாவது கவிதைகள் மிகவும் அழகு, ரசனை.

முதல் நன்றாக இருப்பினும் கொஞ்சம் பின்நவீனக் கவிஞர்களின் தாக்கம் ஓவரோ என எண்ண வைத்தது. அப்புறம் விக்னேஷ்வரி சொன்னது போல பின்குறிப்பு கொஞ்சம் ஓவர்தான்.!

Thamira புதன், ஏப்ரல் 21, 2010 6:38:00 பிற்பகல்  

என்ன கமெண்ட் ஃபாலோ அப் இல்லை? என்ன பண்றது? :-)

ஸ்ரீவி சிவா புதன், ஏப்ரல் 21, 2010 9:48:00 பிற்பகல்  

மிக்க நன்றி ஆதி. அடிக்கடி வாங்க பாஸ்.

நீங்க யூகித்தது சரி தான்.
அடர் கானக புலி அய்யனாரின் பாதிப்பு. வாழ் நாள்ல அவரை மாதிரி ரெண்டு கவிதையாவது
எழுதிறனும்னு தெரு முக்கு பிள்ளையார் கோயில்ல சத்தியம் பண்ணிட்டு வந்திருக்கேன். ;-)

பின்குறிப்பு...அவ்வவ்வ்வ்வ். தூக்கியாச்சு.

ஒரு நிமிஷ கேப்பில ரெண்டு கமெண்ட் போட்டுட்டு ஃபாலோ அப் இல்லைன்னு கட்டைய குடுக்குறீங்க... என்ன ஒரு அடாத்து! :-)

ஸ்ரீவி சிவா புதன், ஏப்ரல் 21, 2010 10:00:00 பிற்பகல்  

@Ramya Ram
நன்றி. அடிக்கடி வாங்க
ஹா ஹா
நீங்க சொன்னதுல நியாயம் இருக்கு.
பின்குறிப்பை நீக்கிட்டேன் .

உத்தண்டராமன் சனி, ஏப்ரல் 24, 2010 12:37:00 பிற்பகல்  

மிக அறுபுதமாக வந்து இருக்கிறது ..தொடருந்து எழுதவும் ...குறிப்பை நீக்கியதும் நன்று :)

Raghu சனி, ஏப்ரல் 24, 2010 7:33:00 பிற்பகல்  

மும்தாஜுக்கு இந்த‌ க‌விதைய‌ புரிய‌ வெச்சுட்டீங்க‌ன்னா, 'குஷி'யாகி 'ஷிவ்வ்வ்வ்வா'ன்னு புல‌ம்ப‌ ஆர‌ம்பிச்சுடுவாங்க‌ ;)

ஸ்ரீவி சிவா ஞாயிறு, ஏப்ரல் 25, 2010 11:13:00 முற்பகல்  

@உத்தண்டராமன்
கண்டிப்பா... மீண்டும் நன்றி நண்பா.

@ரகு
ஹா ஹா. நன்றி ரகு.
எப்படியெல்லாம் கமெண்ட் யோசிக்கிறாய்ங்க!
அது சரி... நீங்க தான் சில்வர் ஸ்பூன் ஷில்பாகுமாரோட சீடன் ஆச்சே...கிண்டல் அதிகமாத்தான் இருக்கும் :-)

சதீஸ் கண்ணன் சனி, மே 01, 2010 8:52:00 முற்பகல்  

ஆழமான
அழகான
அழுத்தமான வரிகள்..

ஸ்ரீவி சிவா திங்கள், மே 03, 2010 8:02:00 பிற்பகல்  

மிக்க நன்றி சதீஸ் கண்ணன்...

கருத்துரையிடுக

இதுவரை பார்த்தவர்கள்

தேடு

Facebook-ல மொக்கை போட